TRAFFIC'ல தொடங்கிய காதல்.. "சினிமா'ல வர LOVE ஸ்டோரிக்கே TOUGH குடுப்பாங்க போலயே!!.." இணையத்தை கலக்கும் நிஜ கதை!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, பெங்களூர் என்றாலே நம்மில் பலருக்கும் ஐடி கம்பெனி, குளிர் நிறைந்த கிளைமேட், டிராபிக் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.

நிறைய ஐடி ஊழியர்கள் பெங்களூரில் பணிபுரிந்து வருவது தொடர்பாக நாம் நிறைய கேள்விப்பட்டிருந்தாலும், அங்குள்ள டிராபிக் என்பது இணையத்தில் பேசு பொருளான ஒரு தலைப்பு தான்.
சமீப காலமாகவே பெங்களூர் பகுதியில் உள்ள டிராபிக் குறித்து அப்பகுதி மக்கள் பல விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை நாம் நிறைய பார்த்திருப்போம்.
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல், டிராபிக்கில் சிக்கி மிகவும் சோர்வடைவதுடன் மட்டுமில்லாமல், அந்த நாளே தொலைந்தது போல சிலருக்கு தோன்றலாம். ஆனால், பலருக்கு நெருக்கடியாகவும், எரிச்சலாகவும் இருக்கும் இந்த பெங்களூர் டிராபிக், ஒரு நபரின் வாழ்க்கையையே திருப்பி போடும் அளவுக்கு மாறிய செய்தி தான் தற்போது இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
Reddit தளத்தில் பயனர் ஒருவர், போக்குவரத்து நெரிசல் காரணமாக தனக்கு நடந்த காதல் கதை தொடர்பான பதிவு ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள தகவலின் படி, தனது மனைவியை பெங்களூரில் உள்ள சிக்னல் ஒன்றில் தான் முதல் முதலாக பார்த்துள்ளார். முதலில் அவர்கள் நட்பாக பழகி வந்த நிலையில், அந்த டிராபிக்கில் அந்த பெண் சிக்காமல் இருக்க, அடிக்கடி அந்த வாலிபர் பைக்கில் டிராப் செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் ஒரு நாள், அங்குள்ள மேம்பாலம் பணி காரணமாக, அந்த வாலிபரும், தோழியும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
வெகு நேரமாக அங்கே சிக்கிக் கொண்டதால், வேறு வழியை பயன்படுத்தி அவர்கள் அங்கே இருந்து கிளம்பி உள்ளனர். அப்போது, பசியில் இருந்த அவர்கள், இரவு டின்னர் அருந்தவும் உணவகம் சென்றுள்ளனர். இதன் பின்னர் அவர்களுக்கு இடையே காதலும் உருவாகி உள்ளது. நல்ல நண்பர்களாக இருந்த அவர்கள், காதலர்களாக மாறி உள்ளனர்.
மூன்று வருடங்கள் காதலித்துக் கொண்ட அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு இணைந்து வாழ்ந்து வருவதாகவும் அந்த வாலிபர் குறிப்பிட்டுள்ளார். டிராபிக் மூலம் உருவான காதல் குறித்து குறிப்பிட்ட அந்த வாலிபர், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு இத்தனை நாட்கள் ஆகியும் அந்த மேம்பாலத்தின் வேலை இன்னும் முடியவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் டிராபிக் காரணமாக உருவான காதல் கதை தொடர்பான செய்தி, தற்போது நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
