காதலியிடம் PROPOSE செய்த காலை இழந்த ராணுவ வீரர்.. சட்டுன்னு இளம்பெண் கொடுத்த பதில்.. 2 கோடி பேரை ஈர்த்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்போரில் ஒரு காலை இழந்த உக்ரேனிய வீரர் ஒருவர், தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் ப்ரொபோஸ் செய்த வீடியோ பல்லாயிரக்கணக்கான மக்களை கவர்ந்திழுத்திருக்கிறது.

நேட்டோவில் இணைய உக்ரேன் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இதனை கடுமையாக எதிர்த்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இருப்பினும், முடிவில் இருந்து உக்ரைன் பின்வாங்காத காரணத்தினால் சிறப்பு ராணுவ நடவடிக்கையை துவங்குவதாக அறிவித்தார் புதின். இதன் காரணமாக லட்சக்கக்கணக்கான ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கிய இந்த போர் இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை. இந்த போரின் விளைவாக கோடிக்கணக்கான உக்ரேனிய மக்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக அண்டை தேசங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.
காதல்
அதே நேரத்தில், இந்த போர் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், போரில் ஈடுபட்டு மோசமான காயங்களுடன் உயிர்தப்பியவர்கள், தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அந்த வகையில் உக்ரைனுக்காக போராடிய வீரர் ஒருவர் தனது வலது காலை இழந்திருக்கிறார். அவர் தனது காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
இந்த வீடியோவில், காலை இழந்த அந்த வீரரை அவருடைய நண்பர் ஒருவர் பின்பக்கமாக தாங்கிப்பிடித்திருக்கிறார். ஒரு கையில் ஊன்றுகோலின் துணையுடன் முழங்கால் போட்டிருக்கும் அவர் காதலிக்கு பரிசாக மோதிரத்தை நீட்ட தயாராக இருக்கிறார். அவருக்கு எதிரே, கண்ணில் துணி சுற்றப்பட்டு சர்ப்ரைஸ் சம்பவத்திற்காக காத்திருக்கிறார் அந்த இளம்பெண். இவர்களை சுற்றிலும் நண்பர்கள் திரண்டு நிற்கின்றனர்.
ஆரவாரம்
இளம்பெண்ணின் கண்கட்டை ஒருவர் அவிழ்க்க, அவரிடம் மோதிரத்தை நீட்டுகிறார் அந்த ராணுவ வீரர். அதைக்கண்டதும் கண்ணீர் கோர்த்த கண்களுடன், அதனை ஏற்றுக்கொள்வதோடு அவரை அணைத்து முத்தமிடுகிறார் அந்தப்பெண். உடனே, அருகில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இந்த வீடியோவை இதுவரையில் 20.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். "தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த ப்ரொபோஸ் இதுதான்" எனவும், "இருவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்" எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்

மற்ற செய்திகள்
