'ஏசி மூலம் கொரோனா பரவுமா?...' 'அதிர்ச்சிமேல் அதிர்ச்சி' தரும் 'ஆய்வு முடிவுகள்...' 'புதிய ஆய்வு' குறித்து 'சீனா விளக்கம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 16, 2020 09:04 PM

சீனாவில் ஏசி மூலம் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Does the corona spread through the AC? Shocking information

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் குறித்த பல்வேறு ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. சீனாவும் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனை உலகிற்கு அறிவித்து வருகிறது.  அந்த வைகயில் புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வில் ஒரே உணவகத்தில் சாப்பிட்ட 3 வெவ்வொறு குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குவாங்சு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனாபாதிப்பு ஏற்பட்ட நபர் ஒருவர் உணவருந்திக் கொண்டிருந்த போது மற்ற இரு குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர். போதுமான இடைவெளியில் அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தாலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த ஏசி இயந்திரம் மூலம் கொரோனா மற்ற இரு குடும்பத்தினருக்கு பரவியிருப்பது தெரியவந்தது.

இதன் மூலம் முழுவதும் மூடப்பட்ட ஏசி அறையில் ஒருவரிடமிருந்து 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் கூடுமான வரை ஏசி இயந்திரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.