'அசந்த நேரத்துல அடிக்க பிளான் போடுதா 'சீனா' ?... 'HDFC வங்கியில் அதிகரித்த முதலீடு' ... பகீர் கிளப்பும் பொருளாதார நிபுணர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியப் பங்குச் சந்தைகளில் சீனா செய்துள்ள முதலீடுகள் குறித்த விவரங்களை வழங்குமாறு, இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கேட்டுள்ளது.
இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த விவரங்களை அவ்வப்போது செபி கேட்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள சூழ்நிலையில், சீனாவிலிருந்து வந்த முதலீடுகள், மற்றும் சீனா வழியாக வந்த முதலீடுகள் குறித்துச் செபி கேட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி தனியார் வங்கியான எச்டிஃஎப்சி (HDFC) வங்கியில் சீனாவின் மத்திய வங்கியான பீப்புள்ஸ் பேங்க் ஆஃப் சீனா தனது பங்கு விகிதத்தை, 0.8% ல் இருந்து 1.01% ஆக உயர்த்தியது. இது பெரும் ஆச்சரியத்தையும், இந்திய நிதித் துறை வட்டாரத்தில் பேசு பொருளாகவும் மாறியது. தற்போது நிலவும் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் பங்கு வெகுவாக குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சீனா இந்திய நிறுவனங்களில் தனது ஆதிக்கத்தைக் கொண்டு வர முயல்வதாக, இந்தியப் பொருளாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் சீனாவின் இந்திய முதலீடுகள் குறித்துச் செபி அறிக்கை கேட்டுள்ளது.