சீனாவின் வுகான் ‘மீன் சந்தையில்’ இருந்து கொரோனா பரவவில்லை?.. வெளியான ‘புதிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 17, 2020 08:07 AM

சீனாவில் உள்ள மீன் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Coronavirus did not originate in Wuhan seafood market, claims study

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அங்குள்ள 'Huannan' மீன் சந்தையில் பணிபுரிந்த நபரே கொரோனவால் முதன் முதலாக பாதிக்கப்பட்ட 'Patient Zero' என அடையாளப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து சீன ஆராய்ச்சியளார்கள் இரண்டு கட்டங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அதில் 41 பேரிடம் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் 27 பேர் மீன் சந்தையால் நேரடியாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் மீதமுள்ள நபர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என கண்டறிய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஜனவரியில் இரண்டாம் கட்டமாக 99 நோயாளிகளிடம் ஆய்வு நடந்தினர். அதில் 49 பேர் மீன் சந்தையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. மீதமுள்ள 50 பேருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என கண்டறியப்படவில்லை.

இதனால் கொரோனா வைரஸ் வுகான் மீன் சந்தையில் இருந்து பரவியதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என வளைகுடா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வுகானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்துதான் கொரோனா பரவியதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.