‘ஒரே நாள்ல இவ்ளோ பேர் பலியா..!’.. ஆடிப்போன ‘அமெரிக்கா’.. கதிகலங்க வைக்கும் கொரோனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 11, 2020 09:13 AM

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus death toll surpasses 2,000 a day in US

உலகை உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 லட்சத்தும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 687 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் தொடங்கி இந்த வைரஸ் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதில் அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 33,483 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2056 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.