5 'தமிழக' மாவட்டங்கள் உள்பட... 36 மாவட்டங்களில் 'இந்த' பாதிப்பு இருக்கு... 'தீவிர' கண்காணிப்பு தேவை... ஐசிஎம்ஆர் 'எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறு தொற்றும் கொரோனா தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில், "நாட்டின் 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறுடன் கூடிய கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நோயாளிகளை ஆய்வு செய்த போது அவர்களில் 40 சதவீதம் பேர் வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்பதும், கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இல்லாமல் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 911 நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு தொற்று (எஸ்ஏஆர்ஐ) சோதனை நடத்தப்பட்டபோது, அதில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 40 சதவீதம் பேர் வெளிநாட்டுக்கு செல்லாதவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள்.
மகாராஷ்டிராவில் 8 மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில் 6 மாவட்டங்களிலும், தமிழகம் மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களிலும் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (சாரி) நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. 15 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் உடன் இருக்கும் சாரி நோயாளிகள் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.
இதன்முலம் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று நோயாளிகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது மார்ச் 14ஆம் தேதிக்கு முன்பாக பூஜ்ஜியமாக இருந்த இவர்களுடைய பாதிப்பின் சதவீதம் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
