உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா... பாதிப்பிலிருந்து 'மீண்ட' கையோடு... 'தேர்தலை' தொடங்கிய 'நாடு!'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 10, 2020 09:03 PM

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட கையோடு நாடாளுமன்ற தேர்தலை திட்டமிட்டபடி தென் கொரியா தொடங்கியுள்ளது.

Election South Korea Goes To Polls Despite Coronavirus Pandemic

கொரோனா வைரஸால் சீனா பாதிக்கப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே தென் கொரியாவும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு சென்றது. இதையடுத்து அந்நாடு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், அறிகுறி தென்பட்ட அனைவருக்கும் பரிசோதனை, விரைவில் சோதனை முடிவை அறிதல், கட்டாய சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளால் நோய் பரவலை மிக விரைவாகக் கட்டுப்படுத்தியது.

தென் கொரியாவில் இதுவரை 10,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 208 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தென் கொரியாவில் இன்று புதிதாக 27 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென் கொரிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி திட்டமிட்டபடி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 15ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்று முதலே வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசமும், கையுறையும் அணிந்து வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடியில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்னரே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து முகக்கவசம், கையுறை அணிந்த மக்கள் போதுமான இடைவெளி விட்டு மிக நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.