'5 கோழி 100 ரூபாய்...' 'போனா வராது...' 'பொழுது போனா கிடைக்காது...' '100 ரூபாய்க்கு 5 கோழி சார்..'. 'எங்க தெரியுமா?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கோழிப்பண்ணைகளுக்கான தீவன வரத்து குறைந்துள்ளதால், வெறும் நூறு ரூபாய்க்கு 5 கோழிகள் விற்கப்பட்டதால் ஏராளமானோர் அள்ளிச் சென்றனர்.

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் ஒரு பண்ணைக்கு மட்டுமே நாள்தோறும் சுமார் 10 மூட்டைகள் அளவுக்கு கோழித் தீவனம் உணவாகத் தேவைப்படுகிறது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தற்போது சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூரில் இருந்து கொண்டுவரப்படும் கோழித் தீவனங்கள் சுத்தமாக கிடைக்கவில்லை என பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால், பிராய்லர் கோழிகளை மேலும் பாதுகாத்து வளர்க்க முடியாத பண்ணை உரிமையாளர்கள், மிகக் குறைந்த விலைக்கு, கிடைத்தவரை லாபம் என்ற மனநிலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, 100 ரூபாய்க்கு 5 கோழிகளை கூவி கூவி விற்று வருகின்றனர். .இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கறிக் கோழிகளை அள்ளிச் செல்கின்றனர்.
