‘கொரோனாவை சிறப்பாக கையாளும் 6 நாடுகள்’... ‘ஆட்சி செய்யும் இவங்க எல்லோருக்குமே’... ‘ஒற்றுப்போகும் ஒரு விஷயம்’... ‘பாராட்டும் நெட்டிசன்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பெண்கள் ஆட்சி செய்யும் 6 நாடுகளில் சிறப்பாக கையாளப்படுகிறது என்று நெட்டிசன்கள் அந்நாட்டுத் தலைவர்களை பாராட்டி வருகின்றனர்.
சீனாவின் வுஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் புரட்டி போட்டு வருகிறது. இதனால் வல்லரசு நாடுகள் எல்லாம் சிதைந்துப் போயுள்ளன. இந்நிலையில், ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள், கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டுள்ளன என்றும், இந்த ஆறு நாடுகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் பெண்கள் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
1. ‘உங்களுக்கு கொரோனா பாதித்தது போன்று செயல்படுங்கள்’ என்பதுதான் நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா அர்டெர்னின் (Jacinda Ardern) தாரக மந்திரம். வாஷிங்டன் போஸ்ட்டில், ‘நியூசிலாந்து கொரோனா வளைவை தட்டையாக்கவில்லை. மாறாக அடித்து நொறுக்கியுள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.
2. அதேபோல, ஜெர்மனியின் பிரதமராக ஏஞ்ஜெலா மேர்கல் (Angela Merkel) இருந்து வருகிறார். அவரும் கொரோனா வளைவை தட்டையாக்கியுள்ளார். ஜெர்மனியில் 1,18,235 பேர் கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளநிலையிலும், ஜெர்மனியில் 52,407 பேர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். ஜெர்மனியில் குணமடைபவர்கள் 95 சதவீதமாக உள்ளனர்.
3. பெல்ஜியத்தின் பிரதமராக சோபி வில்மெஸ் (Sophie Wilmès) இருந்து வருகிறார். பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரையில் குறையவில்லை. இருப்பினும், அவர்களின் இறப்பு விகிதம் 50 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா இறப்பு 10 பேரை எட்டிய நிலையில், வில்மெஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டார்.
4. இதேபோல, பிரதமர் சன்னா மாரின் (Sanna Marin) தலைமையிலான ஃபின்லாந்தில் ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து தினசரி இறப்பு விகிதம் குறைந்துவருகிறது. குணமடைந்தவர்களின் விகிதம் 88 சதவீதமாக உள்ளது. அந்த நாட்டில், ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. பிரதமர் காட்ரின் ஜகோப்ஸ்டாட்டிர்ஸ் (Katrín Jakobsdóttir) தலைமையிலான ஐஸ்லாந்தில், 99 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 2-ம் தேதியிலிருந்து பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. அந்த நாட்டின் 75 சதவீத மக்களுக்கு அடுத்த இரண்டரை மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
6. டென்மார்க்கின் பிரதமராக மெட்டி ஃபிரிடெரிக்சென் (Mette Frederiksen) இருந்து வருகிறார். டென்மார்க்கிலும், ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் அங்கு லாக்டவுனை மெதுவாக தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 பெண் பிரதமர்களும் கொரோனா மட்டுமில்லாது, நாட்டின் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
These are leaders leading there country and have the best coronavirus response.
Oh! They’re also all women. pic.twitter.com/jHwGWCZaO0
— Johnathan Ford (@FordJohnathan5) April 10, 2020