'கொரோனா வைரஸ் நாம நினைக்குறத விட...' அது எப்படி பரவுது தெரியுமா...? ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய '3டி' வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 10, 2020 08:27 PM

பின்லாந்து விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை பற்றி இன்று வெளியிட்ட ஆய்வு முடிவுகள் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

3D model video on how to spread the corona virus

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வரை சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர் மேலும் பலி எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் இந்த கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வைரஸிற்கு மருத்துவர்கள் கூறும் தலைசிறந்த மருந்து தனித்திருத்தல்.

மேலும் கொரோனா வைரஸ் பற்றி பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இன்று பின்லாந்து சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் பொது இடங்களில் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது வெளிப்படும் நீர்த்துளிகளில் வைரஸ் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டுமே இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இதை மிக ஆழமாக ஆய்வு செய்த பின்லாந்து விஞ்ஞானிகள் புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போது வெளியாகும் நீர்த்துகள்கள் 27 அடி வரை வைரஸ் உடன் பாய்ந்து செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில், கொரோனா வைரஸை சுமந்து செல்லும் நீர்த்துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட அதிக நேரம் காற்றில் தங்கி இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது வைரஸ் பாதித்த நபர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தும்மி கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது எனக் காட்டும் 3டி மாதிரியை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

'கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள அலமாரிகளுக்கு இடையில் தும்முவது அல்லது இருமும் போது அவரைச் சுற்றி காற்றுத்துகள்கள் பரவி மேகம் போன்று திரள்வதைவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக சிதறி மறைவதையும் அந்த வீடியோ மூலம் விளக்கி உள்ளனர்.

அப்போது அந்த இடத்திற்கு செல்லும் மற்றொரு நபருக்கு எளிதில் இந்த கொரோனா வைரஸ் தொற்றுகிறது. மேலும் அந்த சிறிய கொரோனா வைரஸ் உடைய நீர்த்துகள்கள் அவரின் சுவாசக் குழாய்க்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது' என பின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் வில்லி ஊரினென் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA