'பாராட்டு மழையில் கேரளா...' 'கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடி மாநிலம்...' இது எப்படி சாத்தியம்...? சிறப்பு தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக கேரளா திகழ்வதாக அனைத்து மாநிலங்களும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி வருகின்றன. அதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவிய சூழலில், இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாநிலம் கேரளம் ஆகும். அதுமட்டும் இல்லாமல் கடந்த மாதம் முன்பு வரை கேரளா கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த கேரளா தற்போது தனது எண்ணிக்கையை அதிகரிக்காமல் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதுவரை கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 364 ஆக உள்ளது. தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையே அதிகரிக்கப்படுகிறது. இதற்கு தென்கொரிய முன்மாதிரியை பின்பற்றியது தான் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கேரளாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு முடிக்கிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் தென்கொரியாவை போல கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதி மட்டும் இல்லாமல் அனைத்து பகுதி மக்களையும் தனிமைப்படுத்தியது. இதில் கொரோனா அறிகுறிகள் என்று கூறிய சளி, காய்ச்சல் மற்றும் இரும்பல் இருக்கும் மக்களை சோதனைக்கு உட்படுத்தியது.
கொரோனா வைரஸ் இருப்பதை கண்டறியும் கருவிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அறிந்த அரசு உடனடியாக செயல்பட்டு, எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதற்கு மாற்றாக புதிய வழிமுறைகளை கையாண்டது. பாதுகாப்பு கவசங்களின் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, மருத்துவ ஊழியர்களுக்கு பரவாமல் அவர்களையும் பாதுகாத்தது.
மேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலானதுமே முதல் மாநிலமான ரூ.20 000 கோடி-க்கு நிவாரண உதவிகளை அறிவித்தது கேரள அரசு. மக்களுக்கு வீடு தேடி உணவு பொருட்களை கிடைக்க செய்தது. மேலும் முதன் முதலாக ஆன்லைன் செயலியான ஸ்விக்கி மூலம் கைகோர்த்து காய்கறிகளை வீட்டிலேயே கொண்டு போய் சேர்த்தது. இதனால் கொரோனா வைரஸ் பரவுதல் கட்டுக்குள் கொண்டுவந்தது கேரளா.
மேலும் ஏ.டி.எம் களுக்கு மக்கள் செல்லாமல் இருக்க அஞ்சலக துறையோடு கைகோர்த்து, பணம் தேவைப்படுபவர்களின் முன்பதிவிற்கு ஏற்றார் போல அஞ்சலக ஊழியர்களின் மூலம் வீட்டிற்கே பணத்தை கொண்டு செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பகாலத்தில் முதலாவது இடத்தில் இருந்த கேரளா, தற்போது அரசின் பல சிறந்த அறிவிப்புகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல தேசிய ஊடகங்கள் முதல் உலக நாடுகளும் கேரள முதல்வர் பிரனாயி விஜயனை பாராட்டி வருகின்றனர்.
இன்றோடு கொரோனா வைரஸ் பரவி 100 நாட்கள் ஆனா சூழலில் கேரள மாநில முதல்வர் இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இன்று வரை கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 357 எனவும், இதில் 97 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்12,710 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.