"நான் அரசியலில் வைத்த புள்ளி..." "தேர்தல் நெருங்கும் போது சுனாமியாக மாறும்..." 'ரஜினிகாந்த்' 'கான்ஃபிடன்ட்' பேச்சு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 17, 2020 03:59 PM

அரசியலில் தான் வைத்த புள்ளி சுழலாக உருவாகி வலிமையான அலையாக மாற்றப்பட்டு தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

The point I put in politics is to become a tsunami-rajinikanth

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "அரசியலில் நேரம்தான் வேலை செய்யும். சரியான நேரத்தில் ஒரு சுழல் உருவாகும். எம்.ஜி.ஆர் அதிக வருடங்கள் தி.மு.க-வில் இருந்தார். கட்சிக்காக நிறையவே உழைத்தார். கலைஞர் முதல்வராக வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருந்தார். கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதும் அவர்மீது அனுதாப அலை வீசியது. அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றியடைந்தார். ராஜீவ் காந்தி படுகொலையின் போது தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவானது. அப்போது தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். ஆந்திராவிலும் என்.டி.ஆர் அலை உருவானது. எனவே, அலை மிகவும் முக்கியமானது", எனத் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், "நானும் சில நாள்களுக்கு முன்னர் புது புள்ளி ஒன்றை வைத்திருக்கிறேன். அந்தப் புள்ளி அமைதியாக யாருக்கும் தெரியாமல் சுழலாக உருவாகியுள்ளது. வலிமையான அலையாக அது மாற்றப்பட வேண்டும். அந்த அலை தேர்தல் கரையை நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும். சுனாமியாக மாறுவது ஆண்டவன் கையில் இருக்கிறது. மக்களாகிய நீங்கள் தான் ஆண்டவன் என்றும் அந்த அற்புதம் அதிசயம் நிச்சயம் நிகழும் என்றும் கூறினார்."

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "எல்லார் பேச்சையும் கேட்கிறவனும் உருப்பட மாட்டான். யார் பேச்சையும் கேட்காதவனும் உருப்பட மாட்டான்’ என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது/

Tags : #RAJINIKANTH #RAJINI #SPEACH #TAMILNADU POLITICS #TSUNAMI