'போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க ஓடிய பிரபல ரவுடி' 'எதிர்பாராம நடந்த ஒரு சம்பவம்' சென்னை அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 22, 2019 09:59 PM

போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடிய ரவுடி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sivakasi rowdy died near Kanchipuram in Chennai

சென்னை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடி பாட்டில் மணி. சிவகாசியை சேர்ந்த இவர் தனது கூட்டாளிகளுடன் காஞ்சிபுரம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.

போலீசார் வருவதை அறிந்த பாட்டில் மணியும் அவரது கூட்டளிகளும் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வடமாவந்தல் பகுதியில் உள்ள கிணற்றில் பாட்டில் மணி தவறி விழுந்துள்ளார். கூட்டாளிகள் தப்பியுள்ளனர். இதனால் காயமடைந்த பாட்டில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கிணற்றில் இருந்த பாட்டில் மணியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

Tags : #TAMILNADUPOLICE #POLICE #SIVAKASI #ROWDY #DIED #KANCHIPURAM #CHENNAI