"பயிற்சி எடுங்கள்.. புரட்சி செய்யுங்கள்.. தயாராகுங்கள்!".. 'போருக்கு ஆயத்தமா?'.. ராணுவத்துக்கு சீன அதிபர் ஜிங்பிங் போட்ட ஆர்டர் என்ன?'.. 'கிடுகிடுக்க' வைக்கும் 'தகவல்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா-சீனா இடையே எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சீன நாட்டு ராணுவ வீரர்களுக்கு போருக்கு தயாராகும் படி சீன அதிபர் ஜி ஜிங்பிங் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அண்மையில் இந்தியாவில் உள்ள சீனர்களை, நிபந்தனைகளுடன் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு அழைப்பு விடுத்தது சீனா. இதனிடையே இருநாட்டு எல்லைகளில் சீன ராணுவ வீரர்கள் கற்கள் முதலானவற்றைக் கொண்டு கலவரம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த போர்ப்பதற்றம் காரணமாக இந்திய பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
இந்நிலையில், சீன அதிபர் தன் நாட்டு வீரர்களை போருக்கான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும், போர்ப் படையை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அதற்கான முழுமையான செயல்பாட்டு திட்டத்தையும் வகுக்குமாறும் தமது ராணுவத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை சீனா கட்டுக்குள் கொண்டுவந்ததற்குக் காரணம், ராணுவத்தை மையமாகக்கொண்ட ஆட்சிதான் என்று கூறிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், அந்த ஆட்சியை தொடர, தமது ராணுவத்தின் மூலம் புரட்சியை கொண்டுவர வேண்டும் என்றும் சீனாவின் பலத்தையும் ஒற்றுமையையும் நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் இந்தியாவுக்கு எதிராக பேசாமல், பொதுவாகவே இதை கூறியிருக்கிறார் என்று தெரிகிறது. இதனிடையே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதேபோல் சீனாவுக்கு எதிராக தைவான் புரட்சி செய்து வருவதும், சீனாவிற்கு உள்ளேயே ஹாங்காங் போராட்டம் செய்துவருவதும், தென் சீன எல்லையில் மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை எதிர்க்க தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
