கொரோனா பரிசோதனைக்கு 'மறுப்பு'... வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... பூட்டை 'உடைத்து' உள்ளே சென்ற போலீஸ்க்கு 'காத்திருந்த' பேரதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து முதிய தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

சென்னை சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு அக்கம், பக்கத்தினர் தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சென்று உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் இரண்டு பேரின் சடலங்கள் கிடந்தன. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெயர் ஜீவன்(85) தீபா(82) என்பதும் அவர்கள் இருவரும் தம்பதிகள் என்றும் தெரிய வந்தது.
இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் அவர்களுக்கு காய்ச்சல் இருந்ததாக அருகில் உள்ளோர் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் அவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், '' ஜீவன் ஜவுளிக்கடை ஒன்றையும், டெய்லரிங் கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடு ஒன்றை வாங்கி மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 10 நாள்களுக்கு முன் இந்தத் தம்பதியினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி இந்தத் தம்பதியினரிடம் கூறியுள்ளனர். அதற்கு இருவரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் இருவரும் இறந்துள்ளனர். பிரேத பாரிசோதனைக்கு பின்னர் தான் அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும். அவர்கள் உறவினர் குறித்த விவரங்களை விசாரித்து வருகிறோம்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
