'சீனாவில் மீண்டும் கொரோனா'... 'முதல் முறையா வாயைத் திறந்த வுகான் வைராலஜி நிறுவனம்'... எப்படி வந்தது கொரோனா?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சையில் சிக்கித் தவித்த வுகான் வைராலஜி நிறுவனம், முதல் முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளது.
![Wuhan Virology Lab Director calls virus leak claims Pure Fabrication Wuhan Virology Lab Director calls virus leak claims Pure Fabrication](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/wuhan-virology-lab-director-calls-virus-leak-claims-pure-fabrication.jpg)
உலக நாடுகள் அனைத்தையும் தற்போது கலங்க வைத்துள்ள ஒரே பெயர் கொரோனா. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், தற்போது வரை உலகமெங்கும் 54 லட்சத்து 58 ஆயிரம் பேருக்குப் பரவி உள்ளது. பலி எண்ணிக்கை என்பது 3 லட்சத்து 45 ஆயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் எப்படித் தோன்றியது என்பது குறித்துத் தொடர்ந்து சர்ச்சை நீடித்துக் கொண்டே இருந்தது.
அந்த நேரம் பார்த்து அமெரிக்க டெலிவிஷன் ஒன்று, இந்த வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, வுகான் நகரில் உள்ள வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற குண்டை தூக்கிப் போட்டது. இந்த கருத்தையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் வுகான் வைராலஜி நிறுவனம் இதுகுறித்து எதுவும் கூறாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வுகான் வைராலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாங் யான்யி, முதல் முறையாகப் பேசியுள்ளார். அதில், ''கொரோனா வைரசை நாங்கள் எங்கள் ஆய்வுக் கூடத்தில் வைத்திருக்கவில்லை. அதை நாங்கள் ஆராய்ச்சியும் செய்யவில்லை. இப்படி இருக்கையில் அந்த வைரஸ் எப்படி எங்கள் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்தது எப்படி?. கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்தது என்று கூறுவது வெறும் கட்டுக்கதை'' என அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சீனாவில் இப்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. அங்கு 3 பேருக்கு கொரோனா பரவி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் 79 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)