"சரி நாங்க ஒத்துக்கிறோம்..." ஆனால் 'விசாரணை' நியாயமாக 'நடக்க வேண்டும்'... 'இறங்கி வந்தது சீனா...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என சீனா அறிவித்துள்ளது.

இதுவரை விசாரணை குறித்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வந்த சீனா, இப்போது இறங்கி வந்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பீஜிங்கில் நேற்று அளித்த பேட்டியின்போது கூறியதாவது, கொரோனா வைரசின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு சர்வதேச அறிவியல் சமூகத்துடன் விஞ்ஞான ரீதியில் ஒத்துழைப்பு தர சீனத்தரப்பு ஒரு திறந்த நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறது. இந்த ஆய்வு செயல்முறையானது, தொழில்முறையில் அமைய வேண்டும். நியாயமானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கவேண்டும். வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் அரசியலை தவிர்க்க வேண்டும். எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். ஆய்வுக்கு முன்பாகவே குற்றச்சாட்டு சுமத்துவதை சீனா எதிர்க்கிறது.
சில அமெரிக்க அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை கவனிக்காமல், பல பொய்களை இட்டுக்கட்டி வருவதை நிறுத்த வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டார்.

மற்ற செய்திகள்
