அடுத்தடுத்த மர்மங்களை கட்டவிழ்க்கும் சீனா!... கொரோனா மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதனை!... அரசியலா? சாதனையா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 15, 2020 10:27 AM

கொரோனா வைரஸுக்கான இரண்டு மருந்துகளை மனிதர்கள் மீது சீனா பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

china leads in clinical trials by testing drugs on humans

உலகிலேயே முதன்முதலில் கொரோனா வைரஸ் அறியப்பட்டது சீனாவில் தான். சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸை சீனா தான் உருவாக்கியது என்றும், உலக அளவில் வல்லரசு நாடாக சீனா வளர வேண்டும் என்பதற்காக இதை செய்ததாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், இவை எதற்குமே அதிகாரப்பூர்வமான ஆதாரம் இல்லை.

எனினும், சீனாவில் ஜெட் வேகத்தில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது திடீரென வெகுவாக குறைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. பல நாடுகளும் சீனா கொரோனாவை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என கேள்விகளை எழுப்பின. அதற்கு தங்களிடம் இருக்கும் கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கொண்டு வந்ததாகக் கூறிய சீனா, அவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தது. ஆனால், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சீனாவின் கொரோனா பரிசோதனை கருவிகளை விமர்சித்தன. தரமற்ற கருவிகள் என்றே அனைத்து நாடுகளும் குற்றம்சாட்டின. இதற்கிடையே சீனாவிலிருந்து கருவிகளை இறக்குமதி செய்ய இந்தியா ஆர்டர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனாவிற்கு மருந்தை கண்டுபிடித்து, ஆரம்பகட்டமாக அதை மனிதர்களுக்கு சீனா பரிசோதிக்க தொடங்கியுள்ளது. எங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியதோ, அதே வுகானில் உள்ள உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தான் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மருந்து பெய்ஜிங்கை சேர்ந்த நாஸ்டாக் லிஸ்டெட் சினோவோக் பயோடெக் என்ற குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மனித இனம் விரைவில் மீள, சீனாவின் இந்த மருந்து கண்டுபிடிப்பு வருங்காலத்தில் உதவலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இது போன்ற தொடர் சம்பவங்கள் சீனாவின் வியாபாரத்தை பெருக்கும் யுக்தியாக அமைந்திருப்பதாக மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.