'ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமா'... 'உங்களுக்கு இனிப்பான செய்தி' ... பட்ஜெட்டில் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படடு உள்ளது என தெரிவித்தார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது தனது உரையில், ''தனிநபர் வருமானம் 5 லட்சம் ரூபாய் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. மேலும் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் முதல் 12,5 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி குறைப்பு. அதனைத்தொடர்ந்து 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரி வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 30 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.
