'சென்னையிலிருந்து ஜப்பான்'... 'நேரடியாக தொடங்கப்பட்ட புதிய சேவை'... 'மகிழ்ச்சியில் பயணிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 29, 2019 11:13 AM
சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு, நேரடி விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது, ஜப்பானிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை இயக்கப்படும் என ஜப்பான் தூதர் கொஜிரோ உச்சியாமா அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் நடைப்பெற்று வந்நிலையில், முதல் பயணிகள் விமானம் டோக்கியோவின் நரிதா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சென்னை வந்தது.
இதனை வரவேற்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் விமானத்திற்கு தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. தென் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நேரடியாக இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இருந்து சென்னைக்கு, வாரந்தோறும் 3 நாட்கள் இந்த விமான சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.