“கால விட்டு.. சில்மிஷமா பண்ற?..”.. “விமானத்தில் கொந்தளித்த இளம் நடிகை!”.. “பரபரப்பு தண்டனை!”
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி- மும்பை விமானத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயணித்த இளம் நடிகை ஒருவரை விமானத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்தபடி, இருக்கைக்கு கீழே காலை விட்டு பாலியல் தொல்லை கொடுத்தபடி வந்துள்ளார் 41 வயதான விகாஸ் சச்தேவா.

அந்த இளம் நடிகையோ அரைத்தூக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் இதுகுறித்து வாக்குவாதம் நடத்திய அந்த இளம் நடிகையிடம் விகாஸ் சச்தேவா மன்னிப்பும் கேட்டுள்ளார்.
எனினும் விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரையும் சாட்சியமாகக் கொண்டு, இளம் நடிகை தொடுத்த வழக்கு விசாரிக்கப்பட்டு சச்தேவாவுக்கு 3 வருடம் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்காத, சச்தேவாவும் அவரது மனைவியும் கதறியுள்ளனர்.
Tags : #FLIGHT
