10 செகண்ட் 'வீடியோ' அனுப்புனா... செம 'பரிசு' காத்திருக்கு... நீங்க 'இத' மட்டும் செஞ்சா போதும்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Jan 28, 2020 10:37 PM

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜியோ நிறுவனம், சமூக ஊடக தளமான ஸ்னாப்சாட் உடன் இணைந்து வீடியோ போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஜனவரி 27-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது.

Reliance Jio and Snapchat launches creative video competiton

இதற்காக சிறப்பு ஸ்னாப்சாட் லென்ஸை உருவாக்கி உள்ளது. இதில் தனியாகவோ அல்லது உங்கள் நண்பர்கள்/குடும்பத்தினருடன் இணைந்து நீங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் இந்த போட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வீடியோ சவாலில் பங்கேற்க, ஸ்னாப்சாட் பயனர்கள் அதிகபட்சமாக 10 விநாடிகள் கொண்ட வீடியோவை பதிவு செய்ய வேண்டும். ஸ்னாப் சாட் செயலியில் உள்ள ஸ்னாப்சாட் லென்ஸைப் பயன்படுத்தி மைக், தொப்பி, தலையணி மற்றும் ஒளி-மோதிரங்கள் போன்ற வெவ்வேறு ஏ.ஆர் வகைகளை பயன்படுத்தி வீடியோ செய்யலாம்.

பின்னர் தங்கள் வீடியோவை 'எங்கள் கதை'  என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக ஸ்னாப்சாட் ஐடி அல்லது ஸ்னாப்சாட் கோடுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக அல்லது ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்துடன் இருக்கும் பட்சத்தில் அதற்கு ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து பரிசுகள் கிடைக்கும்.

முன்னதாக இந்த போட்டியில் வென்ற ஒருவருக்கு தாய்லாந்து ட்ரிப் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் போட்டியில் வெல்லும் பிற போட்டியாளர்களுக்கு இலவச ஜியோ ரீசார்ஜ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.