ட்ரெண்டிங்கில் 'WORLD WAR 3' ஹேஷ்டேக்.... பீதியைக் கிளப்பும் 'அமெரிக்கா'... கதிகலங்கி போயுள்ள உலக நாடுகள்...
முகப்பு > செய்திகள் > உலகம்By Suriyaraj | Jan 06, 2020 02:53 PM
ட்விட்டரில் World War 3 ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருப்பது உலக நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது.

ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு வரும் அமெரிக்கா பாக்தாத் நகரில் நேற்று நடைபெற்ற ட்ரோன் தாக்கதலின் போது ஈரானின் முக்கிய படைத்தளபதியான காசிம் சுலைமானியை கொன்றது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற தாக்ககுதலுக்கு பதிலடியாக அமெரிக்கா இச்செயலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில்,
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவுப்படி சுமார் 750 அமெரிக்க வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால், அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்விட்டரில் World War 3 ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஏற்கெனவே ஈராக், அஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளது. எனவே ஈரான் மீதும் போர் தொடுக்க தயங்காது என உலக நாடுகள் கருதுகின்றன.
2020 புத்தாண்டு நீடித்த அமைதியுடனும், மகிழ்வுடனும் இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மூன்றாம் உலகப்போர் என்னும் பீதியை அமெரிக்கா ஏற்படுத்தியிருப்பது உலக நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது.
