'தேசப் பாதுகாப்புங்க! 10 ஆயிரம் இந்தியர்கள் கைது!'.. அதிரவைத்த அமெடிக்க குடிவரவு தணிக்கைத் துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 12, 2019 07:24 PM

பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் இதுவரை 10 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10K indians arrested, says american immigrant detention centers

கடந்த 2015 முதல் 2018 வரையில் தேச பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் கைது செய்யப்படுகிற எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடிவரவு தணிக்கைத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 2015ல் 3,532 இந்தியர்களும், 2016ல் 3,913 இந்தியர்களும், 2017ல் 5,322 இந்தியர்களும், 2018ம் ஆண்டு 9,811 இந்தியர்களும் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #INDIANS #AMERICA