'எங்க கடையில வேலை செஞ்சவருதான்'... 'குடைக்குள் மூடி வைத்துவிட்டு'... 'பேரதிர்ச்சி கொடுத்த சூப்பர் மார்க்கெட்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சூப்பர் மார்க்கெட் ஒன்று இறந்த ஊழியருடைய உடலை குடைகள் வைத்து மூடிவிட்டு வியாபாரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் மிகப்பெரிய உள்ளூர் நிறுவனங்களில் ஒன்றான கேரிஃபோரின் துணை நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி விற்பனை மேலாளராக பணிபுரிந்துவந்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலுதவி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட, கடையிலேயே அவருடைய உடலைக் குடைகள் கொண்டு மூடிவிட்டு வியாபாரம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு எழுந்த கண்டனத்தை அடுத்து விளக்கமளித்துள்ள அந்தக் கடை நிர்வாகம், உடலை இறந்த இடத்தைவிட்டு நகர்த்தக்கூடாது என்ற நிர்வாக வழிகாட்டுதல்களின்படியே அவ்வாறு செய்ததாகவும், கடையை மூடாமல் வைத்திருந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளது. மேலும் உயிரிழந்த நபருடைய குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருவதாகவும், அவர்களுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் ஆகஸ்ட் 19ஆம் தேதியே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. முன்னதாகவே ஒருமுறை கேரிஃபோர் நிறுவனத்தின் ஒரு கடையில் பாதுகாப்பு காவலர் தெருநாய் ஒன்றை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
