"சோ வாட்?".. நிரூபரின் 'கேள்விக்கு' அதிபரின் 'சர்ச்சை' பதில்!.. "அவருக்கு மக்கள்தான் பதில் சொல்லணும்!" - கடுமையாக தாக்கிய பிரபல இதழ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 10, 2020 03:48 PM

கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் உலகநாடுகள் திணறி வரும் நிலையில், பிரேசிலில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை எடுக்காமல் வைரஸை எதிர்த்துப் போராடவும், சுகாதார நெருக்கடியை சமாளிக்கவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோதான் என மருத்துவம் தொடர்பான இங்கிலாந்து இதழான ‘தி லான்செட்’ விமர்சித்துள்ளது.‌

the lancet criticises brazil presidents “So what?” over covid19 dead

முன்னதாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பிரேசில் அதிபர்  ஜெய்ர் பொல்சனாரோ லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே பேசி வந்ததாகவும், அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தைக் கடந்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 898 ஆக உயர்ந்தும் இருக்கும் சூழலில் கூட இந்த வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அதிபர் அலட்சியம் காட்டி வந்ததாகவும் ‘தி லான்செட்’ விமர்சித்துள்ளது.‌

முன்னதாக பத்திரிகையாளர் ஒருவர், பிரேசில் அதிபரிடம், கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்வியை கேட்ட போது, அதற்கு அவரோ, “அதனால் என்ன?.. மன்னிக்கவும் .. ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்று அவர் கடுமையாக பதில் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்த அந்த இதழ், பிரேசில் மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அந்நாட்டின் அதிபர் கூறிய, “அதனால் என்ன?” என்கிற கேள்விக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த பதிலால் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்தது. எனினும் இந்த விமர்சனத்தை விமர்சனத்திற்கு அதிபரின் அலுலக தரப்பு பதிலளிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

பிரேசிலில் குடிசைப் பகுதிகள் அதிகமுள்ள ஃபாவேலாஸில், 13 மில்லியன் மக்கள் வாழ்ந்து வரும் சூழலில் அங்கு சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றைப் பின்பற்றுவது சற்றே கடினமான ஒன்று எனும் நிலையில், நாட்டின் மக்கள் மீது அதிபருக்கு அக்கறை இல்லை என்றும் மக்களே தான் ஒன்றிணைந்துதான் தங்களுக்கு தேவையான பாதுகாப்பான சூழலை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி செய்வதன் மூலம் அதிபருக்கு பதிலடி கொடுக்கலாம் என்றும் அந்த  ‘தி லான்செட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் லண்டன் இம்பீரியல் கல்லூரி வெளியிட்ட அறிக்கை ஒன்றிலும் பிரேசிலில் நோய்த்தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் இதனால் அங்கு நோய் இன்னும் தீவிரமாகும் என்றும் அந்த நாட்டில் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.