'உலகின்' புதிய 'கொரோனா' மையமாக உருவெடுத்துள்ள 'நாடு!'.. அடுத்தடுத்து 'உயரும்' பாதிப்பு மற்றும் பலி 'எண்ணிக்கை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 17, 2020 10:37 AM

உலகளவில் கொரோனா வைரஸா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா 15.07 லட்சம் பாதிப்புகளுடன் முதலிடத்திலும் அடுத்தடுத்து ஸ்பெயின் (2.76 லட்சம்), ரஷ்யா (2.72 லட்சம்), பிரிட்டன் (2.40 லட்சம்) ஆகிய நாடுகளும் உள்ளன.

Brazil becomes 5th country in covid19 cases பிரேசில் கொரோனா

இந்நிலையில், 5வது இடத்திற்கு பிரேசில் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியின் பாதிப்பு எண்ணிக்கையை தற்போது பிரேசில் முந்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அதிக அளவிலான கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் நேற்று மேலும் 14 ஆயிரத்து 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பின் அளவும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு பிரேசிலில் கண்டறிப்பட்ட நிலையில் தற்போது  அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.33 லட்சம் பேராகவும், பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 633 ஆகவும் உயர்ந்துள்ளது.  அங்கு சமீப காலமாக நாளொன்றுக்கு சராசரியாக 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.