'இப்படி ஒரு அதிபரா?...' 'என்ன செய்றது...' 'விழிக்கும் மக்கள்...' கடுமையான 'விலை கொடுக்கும்' நாடு...
முகப்பு > செய்திகள் > உலகம்தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 11,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், பிரேசிலில் கொரோனா ரைவஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 88,974 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வட அமெரிக்காவை தொடர்ந்து தென் அமெரிக்காவிலும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னமெரிக்க கண்டத்தில் வைரஸ் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியிலில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் குறைவாக பரவி வந்த வைரஸ் பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்நாடு பாதிப்பின் உச்சத்தில் இருந்த ஃபிரான்ஸை பின்னுக்குதள்ளி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிரேசிலில் ஏற்பட்ட இந்த பாதிப்பினால் அந்நாட்டின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அரசின் தவறான நடவடிக்கைகளே என கூறப்படுகிறது. இந்த ஆண்டு 4.7% அளவுக்கு பொருளாதார சரிவை அந்நாடு சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதார இழப்பு எனக் கூறப்படுகிறது.
பிரேசில் அரசு கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையத்தொடங்கிய வேளையில் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தியுள்ளது. அந்நாட்டு அதிபர் பொல்சனரோ, கொரோனாவை விட கொடுமையானது வணிக நிறுவனங்களை மூடுவது என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 881 பேர் கொரோனாவால் அங்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,400 ஐ கடந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் அங்கு 1,88,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே தொடர்ந்து அதிகரித்துவரும் பாதிப்புகளால் அங்கு அதிபருக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.