“ஆமா.. கொரோனா பாசிடிவ்தான்!”.. மீண்டும் மாஸ்க் விஷயத்தில் அதிபர் செய்த சர்ச்சை காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 08, 2020 09:19 PM

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது. இதுவரை அந்நாட்டில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 655 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 860 ஆகவும் உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகம் மொத்தமும் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வந்த சமயத்தில் பிரேசில் அதிபர் மற்றும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக புகார்கள் எழுந்தன.

brazil president testing covid19 positive removes mask controversy

அந்த சமயம் பேசிய பிரேசில் அதிபர், “கொரோனா.. சாதாரண வைரஸ்தான் அதை கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. ஆகவே முகக்கவசம் சமூக இடைவெளிகளை பின்பற்றத் தேவையில்லை. மக்கள் அனைவரும் எப்போதும் போல இருக்கலாம். அவர்கள் வீட்டுக்குள் முடங்கினால், இன்னும் மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்படும். அதனால் அவரவர் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுங்கள்” என்று பேசியிருந்தார். அதிபர் போல்சனாரோ இவரின் கருத்து உலக சுகாதார நிறுவனம் உட்பட அனைத்து தலைவர்களின் விமர்சனங்களையும் பெற்றது.

இதன்பின் அவர் பொதுவெளியில் முகமூடி இல்லாமல் தோன்றி, மக்கள் முன் தோன்றி கைகுலுக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அந்நாட்டு நீதிமன்றம் அவர் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாவிட்டால் 390 டாலர் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை  அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது கொரோனா பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ் என தெரிவித்துள்ளார்.

“என் முகத்தைப் பாருங்கள். நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு இந்த இடம் நன்றாக இருக்கிறது. இங்கு சுற்றி நடக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதை நான் செய்யக்கூடாது. இந்த நாட்டின் ஜனாதிபதி, எப்போதும் மக்கள் நடுவில் இருக்க விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  “என் உடல்நிலை எப்போதும் போலவே ஆரோக்கியமாக இருக்கிறது. என் நுரையீரலும் சோதனை செய்யப்பட்டது. அதுவும் இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு மிகக் குறைந்த அளவிலான பாதிப்புகள்தான் உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு விடுவேன். கொரோனாவுக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று பேசி விட்டு கிளம்பும்போது மாஸ்க்கை கழட்டி விட்டு போனார். பத்திரிக்கையாளர்களிடமிருந்து சில அடிகள் நகர்ந்த உடனேயே, தான் அணிந்திருந்த மாஸ்க்கை அதிபர் கழட்டியதால் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது இந்த சம்பவம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brazil president testing covid19 positive removes mask controversy | World News.