"மாஸ்க் போடலன்னா இதுதான் தண்டனை..." "பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு..." 'அதிபருக்கே' ஆட்டம் காட்டுன 'கோர்ட்...'
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசில் அதிபர் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மீறினால் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியிலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையிலும் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சோனரோ வைரசை கட்டுப்படுத்துவதில் மிகுந்த மெத்தனபோக்கை கடைபிடித்து வருகிறார். கொரோனா பரவத்தொடங்கியபோது அதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தார். அது ஒரு சிறிய காய்ச்சல்தான் என்றும் இதற்காக பொது முடக்கம் தேவையில்லை என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் தற்போது அந்நாட்டில் கொரோனா பரவல் எல்லை மீறி போய்விட்டது.
இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரேசிலில் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிபர் போல்சோனரோ பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தார்.
அதிபரின் இந்த செயல் அவரது ஆதரவாளர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என குறிப்பிட்டு அதிபருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிபர் போல்சோனரோ தனது வீட்டை விட்டு வெளியேறி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
முகக்கவசம் அணியாமல் அதிபர் போல்சோனாரோ விதிமுறைகளை மீறும் பட்சத்தில் 2 ஆயிரம் ரியல்ஸ் (இந்திய மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

மற்ற செய்திகள்
