கொரோனாவுக்கு மத்தியிலும்... பிரபல ஷோரூமில் 'சேல்ஸ்மேன்' பணிக்கு சேர்ந்த தெருநாய்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Aug 04, 2020 05:30 PM

டக்சன் பிரைம் என்ற தெருநாயை தத்தெடுத்து, தனது ஷோரூமில் சேல்ஸ்மேன் ஆக்கியுள்ளது பிரேசிலுள்ள ஹூண்டாய் கார் ஷோரூம். இந்த நாயின்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

brazil hyundai showroom adopts street dog makes car salesman

இந்த ஷோரூமிற்குள் நுழைந்தவுடன் உங்களை வரவேற்பது இந்த ஆண்டின் சிறந்த ஊழியர் விருதுபெற்ற நாய் என்றால் நீங்கள் அக்காட்சியை கற்பனை செய்து பாருங்கள். ஷோரூமிற்கு அருகில்தான் இந்த தெருநாய் வசித்து வந்துள்ளது. அதன்பிறகு இந்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளது டக்சன். பிறகு, மெல்ல மெல்ல ஷோரூமிற்குள் நுழைய ஆரம்பித்து நன்கு பழகவும் ஆரம்பித்துள்ளது. இதனால், இந்த நாயை ஷோரூமின் சிறப்புமிக்க ஊழியர் ஆக்கினார்கள்.

மேலும் அந்த நாய்க்கு தனி அடையாள அட்டையையும் நிறுவனம் வழங்கியது. இப்போது, டக்சன் சிறப்பாக வாடிக்கையாளர்களை வரவேற்று வருகிறது. மேலும், இந்த நாய் மீட்டிங்களில் கலந்துகொள்வது, கடினமாக உழைப்பது, வாடிக்கையாளர்களை வரவேற்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

டக்சன் பிரைமின் கதை இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பிறகு பல்லாயிரம் பேரின் இதயங்களை வென்றது. டக்சனின் புகைப்படங்கள் இதுவரை 30 ஆயிரம் லைக்குகள் வாங்கியுள்ளது. இந்த நாயின் தனி இன்ஸ்டாகிராம் கணக்கினை 28 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brazil hyundai showroom adopts street dog makes car salesman | World News.