தனியாக கிடந்த ஃப்ரிட்ஜ்.. “உள்ள என்ன இருக்குன்னு பாருங்க”.. திறந்துப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மெகி புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிக்க சிறுவன் ஃபிரிட்ஜுக்குள் நுழைந்து கொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | நெல் அரைக்கும் போது மெஷினில் சிக்கிய தலைமுடி.. அலறிய பெண்.. கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சில தினங்களுக்கு முன்பு மெகி என்ற புயலின் தாக்கம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு உண்டானது. அதில் லேய்ட் மாகாணத்தில் உள்ள பேபே நகரத்தின் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போதும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள சிஜே ஜஸ்மே என்ற சிறுவன் ஃபிரிட்ஜுக்குள் நுழைந்து கொண்டுள்ளான்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது ஃபிரிட்ஜ் ஒன்று தனியாக கிடப்பதை பார்த்துள்ளனர். உடனே அதை திறந்து பார்த்தபோது அதற்குள் சிறுவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவன் உயிரோடு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சிறுவனை வேகமாக மீட்ட மீட்புப்படையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும், தாய் மற்றும் சகோதரர் மாயமாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 20 மணிநேரம் அந்த ஃபிரிட்ஜுக்குள் சிறுவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
