நெல் அரைக்கும் போது மெஷினில் சிக்கிய தலைமுடி.. அலறிய பெண்.. கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல் அரைக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள நெல் அரைக்கும் இயந்திரத்தில் நெல்லை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.
அப்போது இயந்திரத்தின் அருகில் இருந்த போது எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமியின் தலைமுடி இயந்திரத்துக்குள் சிக்கியுள்ளது. இதனை அடுத்து முடி உள்ளே இழுத்த வேகத்தில் முத்துலட்சுமியின் தலை இயத்திரத்தில் அடித்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் வலியால் அலறி துடித்துள்ளார். முத்துலட்சுமியின் சத்தத்தை கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அமைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல் அரவை இயந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
