'அபார்ட்மென்ட்டுல விளையாடிட்டு இருந்தாங்க'... 'வெளியே கிடந்த சிறுவனைப் பார்த்து'... 'கதறித் துடித்த குடும்பம்'... 'பதறவைத்த சிசிடிவி வீடியோ!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாவிளையாட்டில் ஏற்பட்ட சண்டையால் 14 வயது சிறுவன் நண்பனை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது நைட்டிக் என்ற சிறுவனுக்கும், மற்றொரு சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் அந்த சிறுவன் வீட்டிற்குள் சென்று சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து நைட்டிக்கை குத்தியுள்ளான்.
இதில் படுகாயமடைந்து நைட்டிக் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, கத்தியால் குத்திய சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து சிறுவன் இறந்து கிடந்ததைப் பார்த்த குடும்பத்தினர் கதறித் துடித்துள்ளனர். பின்னர் விசாரணையின்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிப் பதிவை பார்த்த போலீசார் நடந்ததைப் பார்த்து உறைந்து போயுள்ளனர். இதையடுத்து தப்பியோடி வனப்பகுதியில் மறைந்திருந்த சிறுவனை கண்டுபிடித்த போலீசார் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
