'பக்கத்துவீட்டு அண்ணா'னு அடிக்கடி அங்க போவான்... 'காணாமல்போன சிறுவன்'... 'கட்டிலுக்கு அடியில் கிடந்த பயங்கரம்'... 'பதறவைக்கும் சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாசூரத்தில் 11 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சந்தோஷ் திவாரி என்பவர் பாண்டேசராவில் உள்ள ஜீவந்தீப் நகர் சொசைட்டியில் வசித்துவருகிறார். இவருடைய 11 வயது மகன் ஆகாஷ் பக்கத்து வீட்டில் வசித்துவரும் அமன் சிவஹரே (20) என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுவன் ஆகாஷ் அவ்வப்போது கேம் விளையாட அமனின் செல்போனை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், அதற்கு போனை தர மறுத்து அமன் ஆகாஷை பல முறை கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முந்தினம் இரவு அமன் வீட்டுக்கு சென்ற ஆகாஷ் கேம் விளையாட மீண்டும் செல்போன் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அமன் அகாஷின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் இரவு அகாஷ் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவருடைய பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் அமனிடம் விசாரித்துள்ளனர்.
விசாரணையின்போது, அமன் முன்னுக்குப் பின் முரணாகவே பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது அவர் அகாஷை கொலை செய்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அமனை கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
