'2 வருஷமா உள்ளயே இருந்திருக்கு'... 'ஊதியபோது சிறுவனின் மூக்கிலிருந்து விழுந்ததை பார்த்து'... 'நம்ப முடியாமல் அதிர்ந்துநின்ற பெற்றோர்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்தில் 7 வயது சிறுவனுடைய மூக்கில் இருந்து லோகோ துண்டு ஒன்று 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியே வந்துள்ளது.
தெற்கு நியூசிலாந்தை சேர்ந்த 7 வயது சிறுவனான சமீர் அன்வர் 2018ஆம் ஆண்டு தன்னுடைய விளையாட்டு பொருளான லெகோ துண்டு ஒன்று தன்னுடைய மூக்கில் சிக்கிக் கொண்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு பதறிப்போன சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கும் மூக்கில் சிக்கிய லோகோ துண்டை கண்டுபிடிக்க முடியாமல் போகவே, உள்ளே சென்ற அந்த துண்டு செரிமான பாதை வழியாக வந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவன் சமீருக்கும் வலியோ, வேறு பிரச்சனைகளோ இல்லாததால் வேறு பரிசோதனைகள் செய்யாமல் விட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் செய்த கப் கேக்குள்ளை ஆழ்ந்து வாசனை பிடித்துக் கொண்டிருந்த சமீருக்கு மூக்கில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது. கேக் துண்டுதான் மூக்கினுள் சென்றுவிட்டதாக நினைத்த சமீரின் தாய் மூக்கை ஊதிவிட்டுள்ளார். அப்போது கேக்கிற்கு பதிலாக பூஞ்சை பிடித்த கருப்பு நிற லெகோ துண்டு ஒன்று வெளியே வந்து விழுந்துள்ளது. அதை பார்த்த சமீரின் பெற்றோர் லெகோ துண்டு பெரியதாக இருந்ததால் நம்பமுடியாமல் அதிர்ந்துபோயுள்ளனர். பின்னர் சிறுவன் சமீர் இது காணாமல் போய்விட்டதாகக் கூறினீர்கள், இப்போது இங்கிருக்கிறது எனக் கேட்டுள்ளார். மேலும் இதுபோலவே சிறுவன் சமீர் சிறுவயதில் முத்து ஒன்றையும் மூக்கில் போட்டுக்கொண்டதாகவும், அதை அவருடைய தந்தையே எடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.