”டிரஸ்ஸ கழட்டு... கொரோனா இருக்கா’ன்னு செக் பண்ணனும்...” - 14 வயது ’சிறுவனுக்கு ‘பாலியல்’ சீண்டல்... கொரோனா ’வார்டில்’ நடந்த கொடுமை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு கோவிட் 19 தடுப்பு முகாமில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய நபரின் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி, 14 வயது சிறுவனும் அவரது தாயும் குஜராத்தின் பாவ்நகரில் உள்ள தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுவனின் தாய்க்கு உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு, உடலின் வெப்பநிலையும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தாயாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட தாயும் மகனும் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிறுவனின் தாயார் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதையடுத்து ஜூலை 4ஆம் தேதி, பிற்பகல், சிறுவனின் தாயின் நிலை மோசமடைந்து, வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்
இந்நிலையில் தான் குஜராத்தின் பாவ்நகரில் உள்ள கோவிட் -19 மையத்தில் தனியாக இருந்த 14 வயது சிறுவனிடம், வெள்ளை சட்டை மற்றும் முகமூடி அணிந்த மர்ம நபர், தன்னை ஒரு மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மேலும் உனக்கு கொரோனா இருக்கா என பரிசோதனை செய்யவேண்டும் எனக்கூறி, சிறுவனின் சட்டையை கழட்ட சொல்லியுள்ளார். மேலும் சிறுவனின் நாடி துடிப்பை சரிபார்ப்பது போல் அவரை தகாத முறையில் தொட்டு, தரையில் படுக்க வைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் தனக்கு நடந்த இந்த கொடூர செயலை அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டு, சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய மர்ம நபர் மீது பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்ஸோ) சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் நிலம் பாக் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.