VIDEO : "சே..! 'வீடியோ' கால் நேரத்துல பண்ற காரியமா இது?",,.. பிசினஸ் 'மீட்டிங்'ல அரசு அதிகாரி செய்த முகம் 'சுளிக்கும்' செயல்,,.. கழுவி ஊற்றும் 'நெட்டிசன்கள்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வி ஆரம்பித்து அலுவலக மீட்டிங் என அனைத்தும் வீடியோ கால்கள் மூலம் நடைபெற்று வருகிறது. வீடியோ கால் ஆப்கள் இந்த காலங்களில் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும் நிலையில், அதன் மூலம் பல தவறுகளும் நிகழ்ந்து முக்கிய பிரமுகர்களை சர்ச்சைக்குளாக்கி வருகின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசு அதிகாரி ஒருவர், மற்ற ஊழியர்களுடன் zoom வீடியோ காலில் மீட்டிங் நடத்தியுள்ளார். தொடர்ந்து மீட்டிங் முடிந்தவுடன் அந்த அதிகாரி, வீடியோ காலை அணைத்து விட்டதாக நினைத்து அதே அறையின் ஓரத்திற்கு சென்று அவரின் செக்ரட்டரியான பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டுள்ளார். வீடியோ காலில் உடனிருந்த மற்ற ஊழியர்கள் இதனைக் கண்ட மற்ற அரசு ஊழியர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீடியோ காலில் இருந்த சக ஊழியர் ஒருவர், இதனை வீடியோவாக எடுத்து வெளியிட, அரசு அதிகாரியின் முகம் சுளிக்க வைக்கும் இந்த செயல், இணையதளங்களில் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசு அதிகாரியின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குள்ளான நிலையில், அந்த அதிகாரி மற்றும் பெண் ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர். இருவரின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் அரசு முடிவு செய்துள்ளது.

மற்ற செய்திகள்
