ப்ளீஸ்...! 'எங்க அப்பா அம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க...' 'காதலி வீட்டில் கையும் களவுமாக சிக்கிய காதலன்...' 'எவ்வளவு கெஞ்சியும் விடல, நைட்டோடு நைட்டா...' - காதலன் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலி வீட்டிற்கு வந்த காதலன் பெண்ணின் பெற்றோரிடம் சிக்கியதால் ஊருக்கு பயந்து பாகிஸ்தான் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள சஜ்ஜன் கா பார் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெமாரா ராம் மேக்வால் (20). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 4-ம் தேதி தன் காதலியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அவரின் வீட்டிற்கு இரவு சென்றுள்ளார். ஆனால் அப்போது துரதிஷ்ட வசமாக, தன் காதலியின் பெற்றோரிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார் ராம் மேக்வால்.
மேலும் பெண்ணின் பெற்றோர்களும் இந்த சம்பவத்தை குறித்து ராம் மேக்வாலின் பெற்றோரிடம் கூறப்போவதாக கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன ராம் மேக்வால், அப்பெண்ணின் பெற்றோரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு, நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் கூற வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.
இந்த விஷயம் தெரிந்தால் ஊரில் அனைவர் மத்தியிலும் அவமானமாகிவிடும் என எண்ணி, இரவோடு இரவாக பாகிஸ்தானில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குத் தப்பியுள்ளார். இதை அறிந்த மேக்வாலின் பெற்றோர் மகனைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள அந்த இளைஞரின் உறவினர்கள், அவரது பெற்றோரைத் தொடர்புகொண்டு, அவர்களது மகன் பாகிஸ்தானுக்கு வந்ததையும், அவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்ததையும் கூறியுள்ளனர். இதையடுத்து, ராம் மேக்வாலை விடுவிக்கும்படி பாகிஸ்தான் பாதுகாப்பு படையிடம் பிஎஸ்எஃப் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தான் எல்லை தாண்டி பாயும் என்றால், காதலர்களோ காதலுக்கு பயந்து இந்திய எல்லையையே தாண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
