'தண்ணீரில் மிதந்து கொண்டே திரைப்படம்'... கொரோனாவால் இழந்த சினிமா அனுபவத்தை அதைவிட ரெண்டு மடங்காக பெறும் ‘கொடுத்து வெச்ச’ ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிக நீரோட்டம் இல்லாத சிறிய கால்வாயில் படகில் அமர்ந்தபடி சினிமா பார்க்கும் அனுபவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் வழங்குவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சின்ன சின்ன தூரல்கள் பொழிய, குடை பிடித்தபடி ரம்மியமாக நீரோட்டம் பெரிதாக இல்லாத சிறிய கால்வாய் ஒன்றில் மிதந்து கொண்டிருக்கிற நீண்ட அழகான படகுகளில் அமர்ந்த படி கண்ணுக்கு முன்பாக இருக்கும் பெரிய திரையில் தங்களுக்கு பிடித்த சினிமாவை பார்த்து பரவசத்தை அனுபவிக்கின்றனர் இந்த ரசிகர்கள்.
பல மாதங்களாகவே கொரோனா உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் மக்கள் கூட்டமாக சேர்ந்து அனுபவிக்கும் கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். அவற்றுள் முக்கியமான கேளிக்கை கொண்டாட்டமான திரைப்படத்தை மக்கள் சேர்ந்து பார்க்கும் அனுபவம் கிடைத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் கையில் நொறுக்கு தீனியை கொறித்தபடி கொரோனா பற்றிய பயத்தை விட்டொழித்து விட்டு இடைவெளியுடன் படம் பார்க்கும் அனுபவத்தை பலருக்கும் பிலிப்பைன்ஸ் தலைநகர் தந்து வருகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு காட்சிகள் வீதம் இங்கு மட்டும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. படத்தின் வசனத்தையும் இசையையும் ரசிக்கும் வகையில், பார்வையாளர்களின் மொபைலில் ஒரு ரேடியோ அலைவரிசை முதலிலேயே கொடுக்கப்பட்டு விடுகிறது.
பார்வையாளர்கள் தங்களுடைய காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு காட்சிக்கான இசையை கேட்டுக்கொண்டே காட்சி அனுபவத்தை ரசிக்க முடிகிறது. இந்த வருடம் கொரோனாவால் சினிமா பார்க்கும் மிகப் பெரிய பரவச அனுபவத்தை இழந்த பலருக்கும் இந்த அனுபவம் வித்தியாசமான ஒரு குதூகலத்தை கொடுப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
