'திருமணம் ஆகி 9 மாசம் கூட ஆகல!'.. 'இரும்பு ஊதுகுழலை எடுத்து'.. 'கணவர் செய்த கொடூரம்'.. 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேரணாம்பட்டு அருகே, திருமணமான 9 மாதத்தில் குடும்பத் தகராறில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த யுவராஜ்(22), என்கிற கட்டிட தொழிலாளி. தனது தாய் மாமா மகள் சுப்புலட்சுமியை(19) கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் திருமணம் ஆன நாள் முதல் நாளில் இருந்தே யுவராஜ் குடித்துவிட்டு சுப்புலட்சுமியுடன் சண்டையிட்டு வந்துகொண்டிருந்துள்ளார். இவர்களை, பெற்றோர் அவ்வப்போது சமரசம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த யுவராஜை சுப்புலட்சுமி தட்டிக்கேட்டதால், கணவன், மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரத்தில் யுவராஜ், அருகில் இருந்த இரும்பு ஊதுகுழலால் சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் மயங்கி விழுந்த சுப்புலட்சிமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சுப்புலட்சுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் யுவராஜை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.

மற்ற செய்திகள்
