'ஆண்' வயிற்றில் ஆண் 'குழந்தை'... 'அதிர்ந்து' போன மருத்துவர்கள்... 'தாடி, மீசையுடன்' குழந்தையை பெற்றெடுத்த அதிசயம்...
முகப்பு > செய்திகள் > உலகம்வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு, குழந்தை பிறந்த நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளது.

இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். தாடியுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஆண்கள் வார்டில் அவரை பரிசோதித்த மருத்துவர், அவரது வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படவே அதிர்ச்சியடைந்தார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், வலியால் துடித்த அவரை உடனே பிரசவ வார்டுக்கு அனுப்பி வைத்தார்.
தாடி, மீசையுடன் ஒருவர் பிரசவ வார்டுக்குள் நுழைந்ததைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றில் குழந்தை இருந்தது உறுதிசெய்யப்பட்டது. ஆச்சரியம் தாங்க முடியாமல் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டன. பிறகு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், பெண்ணாக பிறந்த அந்த நபர் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களைப் போலவே வாழ்ந்து வந்துள்ளார் என்றும், தாடி, மீசை வளர்ந்ததற்கு காரணமும் அதுதான் என்றும் கூறினர்.
அவர் மனதளவில் ஆணாக இருந்தாலும் உடல் அளவில் ஒரு பெண் தான் என்பதால், அறிவியல் ரீதியாக அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது என மருத்துவர்கள் விளக்கமளித்தனர். எனினும், குழந்தைக்கு அவர் பால் எதுவும் கொடுக்க முடியாத நிலை இருப்பதால், தற்போதைக்கு மருத்துவமனை குழந்தையை கவனித்து வருகிறது.
தான் அந்த குழந்தையை வளர்க்க விரும்ப வில்லை என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் அவரது அடையாள அட்டையை பார்க்கும் போது அவர் ஆண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட மறுத்து விட்டது.
