‘டிசம்பரிலேயே’ கொரோனா பற்றி ‘எச்சரித்த’ மருத்துவர்... ‘வதந்தி’ எனக் குற்றஞ்சாட்டிய அதிகாரிகள்... ‘காப்பாற்ற’ நினைத்தவருக்கு ‘கடைசியில்’ நேர்ந்த பரிதாபம்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவுவது குறித்து டிசம்பர் மாதமே எச்சரித்த மருத்துவர் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang). அவர் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வீ சாட் மூலமாக தன் நண்பர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர், கடல் உணவுகளை விற்பனை செய்யும் உள்ளூர் மார்க்கெட்டைச் சேர்ந்த 7 பேர் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அதில், நண்பர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து அவர் அனுப்பிய செய்தி ஆன்லைனில் வைரலாக, வதந்தியைப் பரப்பியதாக அவர்மீது அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பின்னரே லி வென்லியாங் கூறியதுபோல கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சீனா சிக்கியுள்ளது.
இதற்கிடையே வைரஸ் பாதித்த நோயாளி எனத் தெரியாமல் ஒருவருக்கு சிகிச்சையளித்தபோது கடந்த 10ஆம் தேதி லி வென்லியாங்கிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சீன மக்களுக்கு அரசின் கடுமையான தணிக்கை முறைகள் மீது கோபத்தையும், லி வென்லியாங் மீது அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
