ரிக்கி பாண்டிங்கிற்கே பயிற்சியாளராகும் “இந்திய வீரர்!”... கொண்டாட்டத்தில் திளைக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியின் பயிற்சியாளராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில், கடந்த மாதம் ஏக்கர் கணக்கில், காடுகள் எரிந்து சாம்பலான சம்பவம், உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில், நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி 8ம் தேதி அன்று புஷ்பயர் பேஷ் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது.
இதில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் மோதும் இரு அணிகளுக்கு, பயிற்சியாளராக முறையே கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தப் போட்டியில், உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய வீரர்களான கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லேங்கர், மைகேல் கிளார்க், ஷேன் வாட்சன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
