VIDEO: செருப்ப கழட்டி 'மணமகனை' நோக்கி எறிந்த பெண்மணி...! 'மணமேடைய பிச்சி நாசம் பண்ணிட்டாங்க...' - என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ 'தெரிய' வந்த உண்மை...! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசம் மாநிலம், ஹிமிபூர் எனும் மாவட்டத்தை சேர்ந்த இளம் ஜோடிகள் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் இந்த இளம் ஜோடிகளும் தங்களின் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற, உற்சாகமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் பலர் சூழ்ந்து இருக்க, தீடீரென இந்த ஜோடிகளை ஒரு பெண் செருப்பால் தாக்கியுள்ளார். குறிப்பாக மணமகனை செருப்பால் அடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், அந்த பெண் வெறித்தனமாக மணமேடையையும் சேதப்படுத்தி, மணமகன் மீது செருப்பை கழட்டி வீசி, தவறான வார்த்தைகளாலும் சரமாரியாக திட்டியிருக்கிறார்.
அங்கிருந்தவர்களோ என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரத்தில் சுத்தரித்துக்கொண்டு, அந்த பெண்ணை வெளியே இழுத்துள்ளனர். விசாரித்த போது தான் தெரிகிறது அந்த பெண் வேறு யாரும் இல்லை, மணமகனின் தாய் தானாம்.
தன்னுடைய சம்மதம் இல்லாமல் வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் மணமகனின் தாயார் அனைவரின் முன்னிலையிலும், சொந்த மகனையே அசிங்கப்படுத்தி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமணம் மணப்பெண் வீட்டு சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது பிடிக்காமல் மணமகனின் தாயார் இந்த செயலை செய்துள்ளார். அதோடு, மணமகனின் உறவினர்கள் யாருமே திருமண விருந்திற்கு அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
दूल्हे की माँ ने जयमाल के वक्त बेटे पर चप्पल से किया हमला, वीडियो वायरल,
माँ को यह रिश्ता मंज़ूर नहीं था,
सुमेरपुर थाना क्षेत्र में एक मैरेज हाल का है वीडियो.#ViralVideo #marriage pic.twitter.com/sVO6pDSndr
— A4Times (@a4_times) July 4, 2021

மற்ற செய்திகள்
