'4 இன்ச்' கம்மி பண்ணுங்க சார்...! மேடம் 'முடி' வெட்டியாச்சு, ஓகேவான்னு பாருங்க...? 'தாரைதாரையாக வடிந்த கண்ணீர்...' - சூப்பர் மாடலுக்கு நடந்த சோகம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்புதுடெல்லியில் மாடல் பெண் ஒருவருக்கு தவறாக முடி திருத்தம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு புதுடெல்லியை சேர்ந்த மாடல் பெண் ஒருவர் அழகுப் போட்டிக்காக முடி திருத்தம் செய்ய டெல்லியில் இருக்கும் பிரபல அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அந்தப் பெண்மணி தன்னுடைய நீண்ட முடியில் நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் முடியை மட்டும் வெட்ட கூறியுள்ளார்.
ஆனால், அந்த பார்லரில் இருந்த நபரோ இளம்பெண்ணின் முடியை மொத்தம் இருப்பதில் 4 அங்குலம் மட்டும் தலையில் வைத்துவிட்டு மீதி உள்ள அனைத்து முடியையும் வெட்டியுள்ளார். தன்னுடைய தோற்றத்தைக் கண்டு கண்ணீர் விட்டு அழுத அந்த பெண்மணி சம்மந்தப்பட்ட கடை நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளார்.
அதோடு, பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தலை முடிக்கான சிகிச்சையில் அந்தப் பெண்ணின் தலை முடி நிரந்தரமாக பாதிக்கப்பட்டதுடன், அரிப்பு மற்றும் முடி உதிர்வு ஏற்பட்டு தன் மாடலாகும் கனவு சிதைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அழகு நிலையம் தனக்கு 3 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு தற்போதய தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்கு விசாரணையின் முடிவில், 'மாடலிங்க் துறையில் இருக்கும் பெண்மணி தனது முடியை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சொகுசு ஹோட்டலில் உள்ள முடி திருத்த கடையில் அதிக அளவில் பணத்தை செலவிட்டுள்ளார்.
ஆனால் சம்மந்தப்பட்ட முடித்திருத்தும் கடை ஊழியர்கள் அந்தப் பெண்ணின் நீண்ட கூந்தல் அதிக அளவில் வெட்டப் பட்டதுடன், முடியும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். இதனால் அவரின் மாடல் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தவறான முடி திருத்தம் செய்த காரணத்தால், இந்த கடை நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கு 2 கோடி இழப்பீடு தொகையை எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்
