இதுவரை இல்லாத அளவு 'உயர்ந்த' வேலையின்மை சதவீதம்... நான்கில் 'ஒரு இந்தியருக்கு' பாதிப்பு... 'சிஎம்ஐஇ' தகவல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 06, 2020 01:38 PM

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு  வேலையின்மை சதவீதம் 27.1 ஆக உயர்ந்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.

Corona Lockdown 1 In 4 Lost Job Unemployment Rate Soars To 27.1%

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முக்கிய துறைகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே 3ஆம் தேதி கணக்கீட்டின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு  வேலையின்மை சதவீதம் 27.1 ஆக உயர்ந்துள்ளதாக நாட்டின் பொருளாதார நிலையை கண்காணிக்கும் சிஎம்ஐஇ அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நான்கில் ஒருவர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் அமைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழப்பதால் அதிகளவு மக்கள் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.