'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்வேறு பிணக்குகளால் சிதறிக் கிடந்த உலக நாடுகளை ஒன்று சேரவைத்து, தற்போது நமக்கு எல்லாம் ஒரே எதிரி கொரோனா மட்டும் தான் என, உலக நாடுகள் பலவற்றையும் சொல்லாமல் சொல்ல வைத்து விட்டது கொரோனா. சீனாவில் தோன்றிய கொரோனா அங்கு மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம், தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை தற்போது ஆட்டம் காண செய்துள்ளது. அமெரிக்காவில் வைரஸ் தொற்று 13 லட்சத்தையும், உயிரிழப்பு 75 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது. ஐரோப்பாவை பொறுத்தவரை , இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, போன்ற வளர்ந்த நாடுகளில் பாதிப்பு தலா 2 லட்சத்தையும் உயிரிழப்பு தலா 25 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
இதனிடையே இங்கிலாந்து அதன் இறப்பு விகிதத்தை இன்னும் வெளியிடாமல் வைத்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையின் படி, ரஷ்யா ஏழாமிடத்துக்கு தற்போது வந்துள்ளது. அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்துள்ளது.
