'சார் அந்த வீட்ல யாரையோ கொன்னு வச்சுருக்காங்க...' 'பயங்கரமா ஸ்மெல் வருது...' 'உள்ள போய் பார்த்தா...' நெஞ்சை உறைய செய்யும் கோர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வயது சிறுவனை, தன் தாயே கொலை செய்து மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் நேற்று மாலை (11.06.2020) 5.30 மணிக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதுகுறித்து ஒகையோ போலீசாரிடம் புகார் அளித்த அக்கம்பக்கத்தினர் அங்கு யாரோ கொலை செய்ய பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் துர்நாற்றம் வீசப்பட்ட வானிஷா ஸ்மித்(33) என்பவரின் வீட்டிற்குள் நுழையும் போது எவ்வித அசம்பாவிதம் நடந்தற்குரிய அறிகுறியே இல்லாமல் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டை ஆராய்ந்த போலீசாருக்கு சுமார் 1 வயதுடைய சிறுவனின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அந்த குழந்தை வானிஷா ஸ்மித் மகன் என்று ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் சிறுவனின் உடல் சிதைந்து காணப்படுவதால் பல நாட்களுக்கு முன்னரே அச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்டுகிறது. மேலும் உடற்கூறு ஆய்வு வந்த பிறகே முழு விவரங்களையும் கூற முடியும் என போலீசார் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்.
வானிஷா ஸ்மித்திற்கு மற்ற குழந்தைகள் உள்ளனர் என்றும், பிள்ளைகள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் அவருடன் வசிப்பதாகக் கூறப்படவில்லை. தன் ஒரு வயது மகனையே கொலை செய்த வானிஷா ஸ்மித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
